பாகிஸ்தான் அணிக்குப் பயிற்சியாளராகும் இந்திய அணிக்கு உலகக் கோப்பை பெற்றுத்தந்த கேரி கிரிஸ்டன்…!
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இடதுகை பேட்ஸ்மேனான கேரி கிரிஸ்டன் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்தார். ஓய்வு பெற்ற பின்னர் அவர் பயிற்சியாளராக பல அணிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்ட அவர் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா அணி உலகக் கோப்பை வெல்வதில் முக்கியப் பங்காற்றினார். இந்திய கிரிக்கெட் அணிக்கு 2011 ஆம் ஆண்டு வரை பயிற்சியாளராக தலைமை ஏற்று வழிநடத்திய உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் அந்த பொறுப்பில் இருந்து விலகினார்.
இந்நிலையில் அவர் இப்போது பாகிஸ்தான் அணிக்கு லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டில் மட்டும் பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் தற்போது மோசமான நிலையில் உள்ள நிலையில் அந்த அணியை மீட்டெடுக்க கேரி கிரிஸ்டன்தான் பொருத்தமான நபர் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.