வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: வியாழன், 22 ஜூலை 2021 (17:13 IST)

கௌதம் மேனனின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜோஸ்வா திரைப்படம் செப்டம்பரில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு ’யோகன் அத்தியாயம் ஒன்று’ என்ற திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டது. முழுக்க முழுக்க அமெரிக்காவில் ஜேம்ஸ்பாண்ட் பாணியில் உருவாக்க திட்டமிட்டிருந்த இந்த திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் சில நாட்கள் நடைபெற்ற நிலையில் திடீரென இந்த படம் டிராப் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து 8 ஆண்டுகளுக்குப் பின்னர் இதே கதையை வருண்என்ற அறிமுக நடிகரின் நடிப்பில் ’ஜோஸ்வா இமைபோல் காக்க’ என்ற பெயரில் கௌதம் மேனன் தற்போது இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டதும் இதற்கான வேலைகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.