வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 22 ஜூலை 2021 (16:33 IST)

சுந்தர் சி விஜய் கூட்டணியை ஏற்படாமல் செய்த தயாரிப்பாளர்!

இயக்குனர் சுந்தர் சி மற்றும் நடிகர் விஜய் கூட்டணியில் தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் கூட்டணிகளில் ஒன்று.

இயக்குனர் சுந்தர் சி தமிழ் சினிமாவின் முன்னணி கமர்ஷியல் இயக்குனராக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறார். தமிழின் பெரும்பாலான முன்னணி நடிகர்களை அவர் இயக்கியுள்ளார். ஆனால் அவர் இன்னும் விஜய்யோடு ஒரு படம் கூட இணையவில்லை.

ஆனால் 90களின் இறுதியிலேயே அவரும் விஜய்யும் இணைய வேண்டும் என விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன் விரும்பி சுந்தர் சி யை சந்தித்து பேசியுள்ளார். அதற்காக தனக்கு முதல் முதலாக வாய்ப்புக் கொடுத்து அப்போது நொடித்துப் போன கங்கா கௌரி நிறுவனத்துக்கு அந்த படத்தை பண்ணலாம் என சுந்தர் சி கூறியுள்ளார். ஆனால் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் விஷ்ணுராம் எஸ் ஏ சியிடம் விஜய்யை வைத்து நான் படம் தயாரிக்கிறேன். ஆனால் சுந்தர் சி இயக்க வேண்டாம் எனக் கூறியதால் இரு தரப்பும் கோபமாகி அந்த படத்தையே கைவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.