முன்னணி நிறுவனத்தை சம்பளம் சொல்லி சைலண்ட் ஆக்கிய விஜய் சேதுபதி!
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இப்போது ஏகப்பட்ட படங்கள் உருவாகி வருகின்றன.
தென்னிந்தியாவின் மோஸ்ட் வாண்டட் நடிகர் என்றால் அது விஜய் சேதுபதிதான். அவர் நடிப்பில் கிட்டத்தட்ட 20 க்கும் மேற்பட்ட படங்கள் உருவாகி அவற்றில் சில ரிலீஸுக்கு இப்போது தயாராக உள்ளன. இந்நிலையில் தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் அவரை அணுகி ஒரு படத்துக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
ஆனால் அவர் தன்னுடைய சம்பளம் 15 கோடி ரூபாய் என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட அந்த நிறுவனம் அவ்வளவு தொகை கொடுக்க முடியாது எனக் கூறி சைலண்ட் ஆகிவிட்டதாம். கையில் பல படங்கள் உள்ளதால் படங்களைத் தவிர்ப்பதற்காக விஜய் சேதுபதி சம்பளத்தை ஏற்றிக்கூறுவதாக சொல்லப்படுகிறது.