1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 1 செப்டம்பர் 2021 (16:32 IST)

6 ஆண்டுகளுக்கு பிறகு தரவரிசையில் முதலிடம் பிடித்த ஜோ ரூட்!

இந்திய அணிக்கெதிரான சிறப்பான ஆடிவரும் ஜோ ரூட் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

சமீபகாலமாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அவ்ட் ஆஃப் பார்மில் இருக்கிறார். அவர் சர்வதேசப் போட்டிகளில் சதமடித்தே ஒரு ஆண்டுக்கும் மேலாகிவிட்டது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனால் அவர் இப்பொது டெஸ்ட் தரவரிசையில் ஐந்தாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அதே நேரம் சிறப்பாக விளையாடி வரும் ஜோ ரூட் டெஸ்ட் தரவரிசையில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் முதலிடத்துக்கு வந்துள்ளார். மேலும் இந்த தொடரில் சொதப்பி வரும் கோலி 6 ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டார். ரோஹித் ஷர்மா அவரை முந்தி ஐந்தாம் இடத்துக்கு சென்றுள்ளார்.