வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: புதன், 1 செப்டம்பர் 2021 (11:16 IST)

ஓவல் டெஸ்ட்டில் ஆண்டர்சனுக்கு ஓய்வா? வெளியான தகவல்!

இங்கிலாந்து அணியின் மூத்த பந்துவீச்சாளரான ஆண்டர்சனுக்கு நாளை ஓவல் டெஸ்ட்டில் ஓய்வளிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் நாளை தொடங்க உள்ளது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளைப் பெற்று தொடர் சமனில் உள்ளது. இதனால் நாளை தொடங்கும் போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் மூத்த வீரரான ஆண்டர்சனுக்கு நாளையப் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் கடந்த மூன்று போட்டிகளிலும் சேர்த்து சுமார் 116 ஓவர்கள் வீசியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு வரிசையாக டெஸ்ட் தொடர் உள்ளதால் அவருக்கு இந்த ஓய்வை வழங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.