திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 29 ஜூன் 2018 (20:09 IST)

இந்திய அணி பேட்டிங்!

இந்தியா - அயர்லாந்து இடையே நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது.
 
இந்திய அணி அயர்லாந்து அணியுடன் இரண்டு 20 ஓவர் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 
இந்நிலையில், இரு அணிகளும் மோதும் இரண்டாவது போட்டி இன்று டப்ளின் நகரில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.
 
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வெல்லும் நோக்கில் களமிறங்கவுள்ளது. அதேபோல் அயர்லாந்து அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் நோக்கில் களமிறங்கவுள்ளது.