ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில்?.. ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!
2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் தொடர் இப்போது உலகளவில் அதிகளவில் பணமழை கொட்டும் கிரிக்கெட் தொடராக உருவாகியுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரலில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்தியாவில் ஐபிஎல் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. அல்லது வெளிநாட்டில் நடத்தப்படுமா என்ற சந்தேகமும் எழுந்தது.
ஆனால் இந்தியாவில்தான் நடக்கும் என அதிகாரப்பூர்வமாக ஐபிஎல் தலைவர் அருண் தோவல் அறிவித்துள்ளார். இன்று ஐபிஎல் தொடருக்கான முதல் கட்ட அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றதை அடுத்து முதல் போட்டியில் சிஎஸ் கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.