செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 21 செப்டம்பர் 2020 (21:31 IST)

IPL -2020; தரமாக ஆடிய பெங்களூரு ...ஹைதராபாத்துக்கு 164 ரன்கள் வெற்றி இலக்கு !

பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே 2020 ஐபில்  போட்டிகள் செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று மாலை 7 மணிக்கு டாஸ் ஜெயித்த வார்னர் தலைமையிலான ஹைதராபாத் சன் ரைசர்ஸ் பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது. கோலிவியின் தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் சாதனை படைக்குமா இல்லை வார்னர் வானவேடிக்கை நிகழ்த்துவாரா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில்,  பெங்களூரு அணி  20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து,  ஹைதராபாத் அணி 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது.

பெங்களூர் அணியில், தேவ்தத் படிக்கல் 36 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவர் மொத்தம் 42 பந்துகளில் 8 பவுண்டரிகள் உள்பட 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்ஸ் 29 ரன்களில் அவுட்டானார்.

அடுத்து கோலி 14 ரன்களில் ஆட்டமிழந்தார். டிவில்லியர்ஸ் 29 பந்துகளில் அரைசதம் அடித்தார். பின்னர் 51 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து,  ஹைதராபாத் அணி 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது.

ஹைதராபாத் அணியில் நடராஜன் , அபிஷேக் சர்மா, விஜய் சங்கர் உள்ளிட்ட வீஅர்கள் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.