1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 12 ஆகஸ்ட் 2020 (07:46 IST)

சர்ச்சைக்குரிய பேஸ்புக் பதிவால் பெங்களூரில் பயங்கர கலவரம்: பெரும் பதட்டம்

சர்ச்சைக்குரிய பேஸ்புக் பதிவால் பெங்களூரில் பயங்கர கலவரம்
பெங்களூரில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவரின் உறவினர் தனது பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை பதிவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு அது மிகப் பெரிய கலவரமாக மாறி உள்ளது 
 
பெங்களூர் புலிகேசி நகர் காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தி என்பவரது உறவினர் நவீன் என்பவர் தனது பேஸ்புக்கில் ஒரு குறிப்பிட்ட மதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்திருந்தார் 
 
இந்த பதிவு காரணமாக உடனடியாக பெங்களூரில் கலவரம் மூண்டது. இன்னொரு குறிப்பிட்ட மதத்தின் ஆலயங்கள் சேதப்படுத்த வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டதால் பெங்களூர் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டு இருப்பதாகவும் கலவரம் செய்தவர்கள் 110 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
மேலும் சர்ச்சைக்குரிய பேஸ்புக் பதிவு செய்த நவீன் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது மேலும் பெங்களூர் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தி என் வீடு சூறையாடப்பட்டதை அடுத்து அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒரே ஒரு பேஸ்புக் பதிவால் பெங்களூர் நகரமே கலவரம் காரணமாக பதட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது