ராகுல் ட்ராவிட்டுக்கு கொரோனா! ஆசியக்கோப்பைக்கு செல்வாரா?
இந்திய அணியின் கிரிக்கெட் அணி பயிற்சியாளரான ராகுல் ட்ராவிட்டுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரராகவும், தற்போதைய இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் இருந்து வருபவர் ராகுல் ட்ராவிட். இந்த மாத இறுதியில் அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஆசியகோப்பை டி20 தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் அரபு அமீரகம் புறப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது தலைமை பயிற்சியாளரான ராகுல் ட்ராவிட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசியக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு பயிற்சி வழங்க அவர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.