திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 20 ஆகஸ்ட் 2022 (14:50 IST)

இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் திணறும் ஜிம்பாப்வே… இந்திய பவுலர்கள் அட்டாக்!

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது நடந்து வருகிறது.

இந்தியா மற்றும் ஜிம்பாவே அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமீபத்தில் நடந்தது.  இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

இதையடுத்து இரண்டாவது போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இதையடுத்து ஜிம்பாப்வே தற்போது வரை 5 விக்கெட்கள் இழந்து 75 ரன்கள் சேர்த்து தடுமாறி வருகிறது. ஷர்துல் தாக்கூர் அதிகபட்சமாக 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.