வியாழன், 5 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: வியாழன், 15 ஜூன் 2017 (14:53 IST)

வங்கதேசம் பேட்டிங்: டாஸ் வென்ற இந்தியா பந்து வீச முடிவு!

வங்கதேசம் பேட்டிங்: டாஸ் வென்ற இந்தியா பந்து வீச முடிவு!

சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக இன்று மோதுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளார்.


 
 
சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்தியா-வங்கதேச அணிகள் இன்று மதியம் 3 மணிக்கு பிர்மிங்காமில் மோதுகிறது. முதல் அரையிறுதியில் இந்தியாவின் பரம எதிரி பாகிஸ்தான் இங்கிலாந்தை வென்று இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ள நிலையில் இன்றையை போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் பாகிஸ்தானுடன் மோதும்.
 
இந்த சூழலில் வங்கதேசத்தை இந்தியா அரையிறுதியில் சந்திக்கிறது. வங்கதேச அணி கத்துக்குட்டி அணியாக இருந்தாலும் அது பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிப்பதில் சளைக்காத அணி. இதனால் இந்த போட்டியின் வங்கதேசம் நிச்சயம் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்கும் என கூறப்படுகிறது.
 
இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பந்து வீசுவதாக முடிவு செய்துள்ளார்.