Daily Horoscope
✕

எளிய இலக்கை போராடி வென்ற இந்தியா… போர் அடித்த முதல் ஒருநாள் போட்டி!

Written By vinoth
Updated: வெள்ளி, 28 ஜூலை 2023 (07:44 IST)
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி அதிருப்தியளிக்கும் வகையில் முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதையடுத்து பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் வெறும் 23 ஓவர்கள் மட்டுமே விளையாடி 114 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்த போட்டியில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்கள் மற்றும் ரவீந்தர ஜடேஜா 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி இந்த எளிய இலக்கை 5 விக்கெட்கள் இழந்து 22.5 ஓவர்களில் எடுத்தது. இந்திய அணி சார்பில் இஷான் கிஷான் அதிகபட்சமாக 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 4 விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

எல்லாம் காட்டு

ஐபிஎல் 2027 தொடரில் எம்.எஸ். தோனி விளையாடுவாரா? மருத்துவ பரிசோதனைக்கு பிறகே முடிவு!

இந்தியா - ஜிம்பாப்வே மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: சரிவை சந்திக்கும் ஜிம்பாப்வே அணி!

முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டம்.. நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா...

உலக கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஃபாலோ ஆன ஆஸ்திரேலியா.. தெ.ஆ. அணி சாதனை..

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி.. ஒரே பிரிவில் தங்கம், வெள்ளி, வெண்கலம் பெற்ற இந்தியர்கள்...

அடுத்த கட்டுரையில்
Show comments