1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated: ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (08:01 IST)

வங்கதேச அணியோடு இன்று முதல் ஒருநாள் போட்டி… இந்திய அணியில் யாருக்கெல்லாம் இடம்?

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசம் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது . முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்க இருக்கும் நிலையில் காயம் காரணமாக கடைசி நேரத்தில் இந்திய அணியின் பந்துவீச்சாளர் முகமது ஷமி விலகியுள்ளார்.

இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோர் அணிக்குள் திரும்பியுள்ளனர். தொடர்ந்து சொதப்பி வரும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டுக்கு இந்த தொடரிலும் வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய உத்தேச அணி

ரோஹித் சர்மா (கேப்), ஷிகர் தவான், விராட் கோலி, கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெய் கீப்பர்.), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், முகமது சிராஜ்.