வங்கத்தேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடர்.. முகமது ஷமி திடீர் விலகல்!
இந்தியா மற்றும் வங்கதேசம் நாடுகளுக்கு இடையே நடைபெறவுள்ள ஒரு நாள் தொடரில் இருந்து முகமது ஷமி விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசம் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது
முதல் ஒருநாள் போட்டி நாளை தொடங்க இருக்கும் நிலையில் காயம் காரணமாக இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர் முகமது ஷமி விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
மேலும் அவர் டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட முடியாது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்திய அணியில் ஷமிக்கு பதிலாக உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது
23 வயது இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் தற்போது மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran