நீ குடுத்தத திரும்ப குடுப்பேன்.. பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஆஸ்திரேலியா! – IND vs Aus இரண்டாவது ஒருநாள் போட்டி!
இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டி தொடர் இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்த போட்டியில் இந்திய அணி பந்து வீச்சாளர் முகமது ஷமி அட்டகாசமாக விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் ஆனார்.
இந்நிலையில் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஆஸ்திரேலியா தீவிரம் காட்டும். அதேசமயம் இந்தியாவிற்குள் போட்டிகள் நடப்பதால் இந்திய மைதானங்களை அத்துப்படியாக வைத்திருக்கும் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்துவார்கள்.
இந்த போட்டியை கே.எல்.ராகுல் கேப்டனாக வழிநடத்த உள்ளார். மத்திய பிரதேசத்தில் உள்ள ஹொல்கர் மைதானத்தில் மதியம் 1.30 மணி அளவில் போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியை ஜியோ சினிமா செயலியில் இலவசமாக காண முடியும்.
Edit by Prasanth.K