திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (08:16 IST)

சீனாவில் நடைபெறும் ஆசிய போட்டி.. முதல் பதக்கத்தை வென்றது இந்தியா..!

சீனாவில் நடைபெறும் ஆசிய போட்டிகளில் முதல் பதக்கத்தை இந்தியா வென்றதை அடுத்து பதக்கப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது. 
 
சீனாவில் நடைபெறும் ஆசிய போட்டிகளில் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகளுக்கான துப்பாக்கி சுடுதலில் இந்தியா வெள்ளி வென்றது. ரமிதா, அஷி சோக்ஸி, மெகுலி ஜோடி 1886 புள்ளிகள் பெற்றதால் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.
 
அதேபோல் படகுப் போட்டியில் அர்ஜூன் லால், அர்விந்த் சிங் ஜோடி வெள்ளி வென்றது. இதனால் இந்தியாவிற்கு அடுத்தடுத்து 2 வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva