புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2019 (18:45 IST)

ஆட்டத்தை கெடுத்த மழை – விளையாடுமா இந்தியா?

பேட்டிங் செய்து வரும் நியூஸிலாந்து இன்னும் 4 ஓவர்களில் ஆட்டத்தை முடிக்க இருக்க மழை வந்து ஆட்டத்தை நிறுத்தியிறுப்பது ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே நியூஸிலாந்தோடு ஆட வேண்டிய லீக் சுற்று ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் அரையிறுதியில் இரண்டு அணிகளும் மோதி கொள்கின்றன. தற்போது 46 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருக்கிறது நியூஸிலாந்து. அடுத்து இந்தியா விளையாட இருக்கிறது.

இந்நிலையில் தற்போது மழை பெய்ய தொடங்கியிருப்பதால் ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மழை நிற்காத பட்சத்தில் ஆட்டம் ரத்து செய்யப்படவும் வாய்ப்பிருக்கிறது.