புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 21 ஜூலை 2021 (13:46 IST)

இலங்கையை வென்ற இந்தியா! – பாகிஸ்தானை முந்தி சென்று முதலிடம்!

இலங்கை அணியை வென்ற இந்திய அணி அதிக வெற்றி பெற்ற அணி பட்டியலில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளியுள்ளது.

இலங்கைக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது. இந்திய அணி வீரர் தீபக் சஹர் கடைசி வரை பொறுமையாக நின்று விளையாடியது பலரால் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் ஒருநாள், டெஸ்ட் உள்ளிட்டவற்றில் அதிக வெற்றி பெற்ற பட்டியலில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளியுள்ளது இந்தியா. 125 வெற்றிகளுடன் பாகிஸ்தான் முதலிடத்தில் இருந்த நிலையில், 126 வெற்றிகளுடன் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது இந்தியா.