Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது டெஸ்ட்டில் வெற்றியை நோக்கி இந்தியா!

Written By vinoth
Updated: திங்கள், 5 பிப்ரவரி 2024 (14:04 IST)
இந்தியா – இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 255 ரன்களை குவித்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நேற்று பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 67 ரன்களை எடுத்திருந்தது. இங்கிலாந்து அணிக்கு இன்னும் 332 ரன்கள் தேவை. 9 விக்கெட்டுகள் கைவசம் இருந்த நிலையில் இன்று நான்காவது நாளில் பேட்டிங்கை தொடங்கியது.

அதிரடியாக பேஸ்பால் ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், சீராக விக்கெட்களை இழந்து வருகிறது. இந்நிலையில் இப்போது 8 விக்கெட்களை இழந்து 275 ரன்களை சேர்த்து விளையாடி வருகிறது. இந்தியா வெற்றி பெற இன்னும்  2 விக்கெட்கள் மட்டுமே தேவையெனும் நிலையில் எளிதில் இந்த போட்டியை இந்திய அணி வென்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாம் காட்டு

2027ஆம் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கும் தேதி.. ஐசிசி மாஸ்டர் பிளான்..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. அடித்து விளையாடும் வங்கதேசம்.. விட்டா ஜெயிச்சிடும் போல...

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. ஆர்.அஸ்வின் கணித்த உத்தேச அணி வீரர்கள் பட்டியல்..

டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் ரோஹித் சர்மா.. இனி கிரிக்கெட் அவ்வளவு தானா?

ஐபிஎல் டெல்லி கேபிடல்ஸ் பிளேயர் கைது.. மருத்துவ மாணவிக்கு பாலியல் வன்கொடுமை?..

அடுத்த கட்டுரையில்
Show comments