செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 10 ஜனவரி 2023 (16:18 IST)

400 ரன்களை நோக்கி இந்திய அணி… இலங்கை பவுலர்கள் திணறல்!

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தியா மாற்றம் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா மற்றும் கில் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தனர்.

ரோஹித் ஷர்மா 83 ரன்களும், கில் 70 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்க, அடுத்து இறங்கிய கோலி சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தற்போது இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து 275 ரன்கள் சேர்த்துள்ளது. இன்னும் 12 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் இந்திய அணி அதிரடியாக விளையாடி 400 ரன்கள் நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பேட்ஸ்மேன்களின் அதிரடி ஆட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இலங்கை பவுலர்கள் திணறி வருகின்றனர்.