Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டிகளில் இம்பேக்ட் ப்ளேயர் விதி தொடரும்… பிசிசிஐ அறிவிப்பு!

Written By vinoth
Updated: ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (07:26 IST)
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ‘இம்பேக்ட் ப்ளேயர்’ என்ற புதிய விதிமுறையை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஒரு அணி விளையாடும் போது 11 வீரர்களோடு சேர்த்து மாற்று வீரர்களாக 4 பேரையும் அறிவிக்கவேண்டும். போட்டி தொடங்கி 14 ஓவர்கள் முடிவதற்கு  முன்பாக, ஒரு வீரை இம்பேக்ட் வீரராக தேர்வு செய்து கொண்டு, அணியில் இருக்கும் ஒரு வீரரை வெளியேற்றி விடலாம்.

இதன் மூலம் இப்போது போட்டிகளில் ஒரு அணி 12 வீரர்களோடு விளையாடுகிறது என்றே சொல்லிவிடலாம். இந்த விதிமுறை ஐபிஎல் கிரிக்கெட்டின் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக திணிக்கப்பட்டதாகவே உள்ளது. ஆனால் இதனால் பவுலர்களின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஆல்ரவுண்டர்கள் பந்துவீச அழைக்கப்படுவதும் குறைந்துள்ளது. இந்த விதிகுறித்து ரோஹித் ஷர்மா, விராட் கோலி, முகமது சிராஜ், அக்ஸர் படேல் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதனால் இம்பேக்ட் ப்ளேயர் விதி குறித்து ஆலோசிப்பதாக பிசிசிஐ தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இதனால் அடுத்த சீசனில் இந்த விதி நீக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது 2025-2027 சீசன் வரை இந்த விதி தொடரும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

எல்லாம் காட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. அடித்து விளையாடும் வங்கதேசம்.. விட்டா ஜெயிச்சிடும் போல...

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. ஆர்.அஸ்வின் கணித்த உத்தேச அணி வீரர்கள் பட்டியல்..

டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் ரோஹித் சர்மா.. இனி கிரிக்கெட் அவ்வளவு தானா?

ஐபிஎல் டெல்லி கேபிடல்ஸ் பிளேயர் கைது.. மருத்துவ மாணவிக்கு பாலியல் வன்கொடுமை?..

வைபவ் சூர்யவன்சிக்கு உண்மையிலேயே 15 வயதுதானா? பிரட் லீ சொன்ன கருத்து என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments