இந்தியாவில் பிரம்மாண்டமாக ஐசிசி உலகக்கோப்பை! எப்போது தொடங்குகிறது?
கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
என்னதான் பல டி20 கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும் 50 ஓவர் போட்டிகளுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு மற்றதை விட கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிகம். இந்த ஆண்டு ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கும் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி அக்டோபர் 5ம் தேதி தொடங்கி இறுதி போட்டி நவம்பர் 19ம் தேதி நடைபெறும் என கூறப்படுகிறது. 46 நாட்களில் 48 போட்டிகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. பெங்களூர், சென்னை, டெல்லி, கவுஹாத்தி, கொல்கத்தா, லக்னோ, மும்பை என 12 இடங்களில் லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K