வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 21 மார்ச் 2023 (16:04 IST)

இந்தியா பாகிஸ்தான் போட்டிக்காக பிரதமர் மோடியை சந்திப்பேன்: ஷாஹித் அப்ரிடி..!

இந்தியா பாகிஸ்தான் போட்டிக்காக இந்திய பிரதமர் மோடியை சந்தித்து வேண்டுகோள் விடுக்க தயார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கடந்த பல ஆண்டுகளாக இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் நடைபெறவில்லை. உலக கோப்பை போட்டிகள் தவிர வேறு எந்த போட்டிகளும் இரு நாடுகளுக்கு இடையே நடைபெறாத நிலையில் இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாஹித் அப்ரிடி பேட்டி அளித்துள்ளார்.
 
இந்தியா பாகிஸ்தான் அணிகள் இடையே கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது குறித்து இந்திய பிரதமர் மோடியுடன் முறையிட தயார் என்று அவர் தெரிவித்துள்ளார். 
 
இரு நாடுகளுக்கு இடையே எல்லை பாதுகாப்பு அரசியல் விவகாரங்கள் உள்ளிட்ட பிரச்சனை இருந்து வந்தாலும் அவை விளையாட்டில் எதிரொலிப்பதை தவிர்க்க வலியுறுத்த முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva