ஐசிசி டெஸ்ட் தரவரிசை – முதல் 3 இடங்களை பிடித்து ஆஸ்., வீரர்கள் சாதனை
சில நாட்களுக்கு முன் உலகக் கோப்பை டெஸ்ட் சேம்பியன் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில், ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து, 163 ரன்களும், 2 வது இன்னிங்ஸ்கில் 18 ரன்னும் அடித்த நிலையில், சிறந்த வீரர்கள் பட்டியலில் 3 வது இடம் பிடித்துள்ளார்.
இப்போட்டியில், முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த ஸ்மித் 885 புள்ளிகளுடன் தரவரிசைப்பட்டியலில் 2 வது இடம் பிடித்துள்ளார்.
அதேபோல், ஆஸ்திரேலியா வீரர் மாரன்ஸ் லபுசேன் 903 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்துள்ளார்.
எனவே 39 ஆண்டுகளுக்குப் பின் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஒரே அணியைச் சேர்ந்த 3 பேட்ஸ்மேன்கள் இப்படியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.