திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வியாழன், 10 அக்டோபர் 2024 (14:31 IST)

முச்சதம் அடித்த இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இளம் வீரரான ஹாரி ப்ரூக் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பிக்கை அளிக்கும் வீரராக வள்ர்ந்து வருகிறார்.  குறைவான பந்துகளை எதிர்கொண்டு 1000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இந்நிலையில் இப்போது பாகிஸ்தானுக்கு எதிராக நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் அவர் முச்சதம் அடித்து அசத்தியுள்ளார். ஐந்தாவது வீரராகக் களமிறங்கி அவர் 322 பந்துகள் சந்தித்து 317 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரின் இந்த அதிரடியான இன்னிங்ஸில் 29 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும்.

இதே போட்டியில் இங்கிலாந்து நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் 262 ரன்கள் சேர்த்து கலக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 556 ரன்கள் சேர்த்த நிலையில் தற்போது இங்கிலாந்து அணி 798 ரன்கள் சேர்த்து 242 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இன்னும் ஒன்றரை நாள் இருப்பதால் இங்கிலாந்து அணி இந்த போட்டியை வெல்லவும் வாய்ப்புள்ளது.