செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 21 அக்டோபர் 2023 (07:20 IST)

நியுசிலாந்து போட்டியில் பாண்ட்யா விளையாட மாட்டார்…. பிசிசிஐ அறிவிப்பு!

சில தினங்களுக்கு முன்னர் நடந்த பங்களாதேஷுக்கு எதிரான போட்டியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது பந்துவீசிய ஹர்திக் பாண்ட்யா காலில் காயம் ஏற்பட்டு உடனடியாக மைதானத்தை விட்டு வெளியெறினார். அவருக்கு பதிலாக விராட் கோலி பந்துவீசினார்.

இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர் ஹர்திக் பாண்ட்யாவின் காயம் பற்றி கேப்டன் ரோஹித் ஷர்மா பேசியுள்ளார். அதில் “ஹர்திக் பாண்ட்யாவை பொறுத்தவரை பெரிதாக கவலைப்பட தேவையில்லை.  அவரின் மருத்துவ நிலையை அறிந்து அதற்கேற்ப திட்டமிடுவோம்.” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் ஞாயிற்றுக் கிழமை நடக்கவுள்ள நியுசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அதற்கடுத்து இங்கிலாந்து அணியுடனான போட்டியில் அவர் அணியில் இணைவார் என சொல்லப்படுகிறது.