திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 3 ஜூலை 2024 (06:54 IST)

என்னது லாராவோடு பாபர் ஆசாமை ஒப்பிடுவதா?... தொகுப்பாளரை அடிக்கப் பாய்ந்த ஹர்பஜன்!

நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியுள்ளது. பாகிஸ்தான் அணி அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோற்றது. மேலும் பாகிஸ்தான் அணி இந்தியாவிடமும் தோற்றது. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்டதால் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 க்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

இந்த படுதோல்விக்கு பாகிஸ்தான் அணிக்குள் இருக்கும் கோஷ்டி சண்டையே காரணம் என சொல்லப்படுகிறது. மேலும் பாபர் ஆசாமின் கேப்டன்சியும் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு சற்று முன்பாக அவர் திடீரென மீண்டும் கேப்டனாக அறிவிக்கப்பட்டது சர்ச்சைகளை எழுப்பியது.

இந்நிலையில் பாபர் ஆசாமை பிரையன் லாராவோடு ஒப்பிட்டு இதில் யார் சிறந்தவர் என ஒரு நிகழ்ச்சியில் ஹர்பஜன் சிங்கிடம் கேட்கப்பட்டது. அந்த கேள்வியால் கடுப்பான ஹர்பஜன், தொகுப்பாளரை அடிக்க ஏதேனும் பொருட்கள் கிடைக்குமா என்று தேடினார். ஆனால் ஒரு கட்டத்தில் அங்கிருந்த பழங்களை எடுத்துக் கொடுத்து “உங்களுக்கு சிறந்த அறிவு இருக்கிறது” எனப் போலியாக வாழ்த்துவது போல பேசியமர்ந்துவிட்டார்.