Daily Horoscope

ரவி சாஸ்திரிக்கு காட்டமான பதில் சொன்ன ஹர்பஜன் சிங்!

Updated: வியாழன், 27 ஜனவரி 2022 (15:41 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலிக்கு ஆதரவாக ரவி சாஸ்திரி பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன்ஷிப் கோலியிடம் இருந்து பறிக்கப்பட்டது பல்வேறு கருத்துகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இப்போது கோலி டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பையும் அவர் துறந்தார். இந்நிலையில் இது சம்மந்தமாக இப்போது முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில் ’நிச்சயமாக கோலி இன்னும் 2 ஆண்டுகள் வரை இந்திய அணியின் கேப்டனாக நீடித்திருக்கலாம். வரும் ஆண்டுகளில் சொந்த மண்ணில் நிறைய டெஸ்ட் போட்டிகள் உள்ளன. அப்படி அவர் தொடர்ந்திருந்தால் அவர் தலைமையின் கீழ் 50 முதல் 60 வெற்றிகளை அவர் பெற்றிருப்பார். ஆனால் அது சிலருக்கு அதை ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் நீண்ட காலமாக அணியை வழிநடத்தியவர் என்ற முறையில் அவரின் முடிவை நாம் மதிக்கவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

ரவி சாஸ்திரியின் இந்த கருத்துகள் வலுவான கண்டனங்கள் எழுந்துள்ளன. முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அளித்துள்ள பதிலில் ‘கோலி இன்னும் வெற்றிகள் அதை ஜீரணிக்க மாட்டார்கள் என்று ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார், அவர் யாரை கூறுகிறார் என்று தெரியவில்லை. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் பேட்ஸ்மேன்களின் புள்ளிவிவரங்களை எடுத்துப் பார்த்தால் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. பேட்ஸ்மேன்கள் அதிகமாக ரன்கள் குவிக்காததால் அவர்களின் நம்பிக்கை குறைந்துள்ளது’ எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments