செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 16 அக்டோபர் 2022 (09:09 IST)

“உலகக் கோப்பையில் இந்த அணிதான் அபாயமாக இருக்கும்…” கம்பீர் கருத்து!

இந்த உலகக்கோப்பையில் இலங்கை அணி மிகவும் அபாயகரமான அணியாக இருக்கும் கம்பீர் கணித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். துணிச்சலாக பலரைப் பற்றியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர்.

இந்நிலையில் இந்த உலகக்கோப்பை குறித்து பேசியுள்ளார். அதில் இந்தமுறை இலங்கை அணிதான் மிகவும் அபாயகரமான அணியாக இருக்கும் எனக் கூறியுள்ளார். மேலும் அவர் “ வரிசையாக இலங்கை அணி சிறப்பாக விளையாடி வருகிறது. அவர்கள் ஆசியக் கோப்பையை வெல்லுமென யாருமே எதிர்பார்க்கவில்லை. அதனால் இந்த உலகக்கோப்பையில் இலங்கை அபாயகரமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.