1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 15 அக்டோபர் 2022 (21:58 IST)

இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்...

Srilanka
இலங்கை நாட்டில் தற்போது டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை நாட்டில் சமீபத்தில்,பொருளாதார நெருக்கடடியால் உள் நாட்டு போராட்டம் வெடித்த நிலையில்,  புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில், அங்கு பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. இதனல் மூலம் ஓரளவு அத்தியாவசியப் பொருட்கள் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், சுற்றுலாத்துறை நாடான இலங்கையில் தற்போது டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்லதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்கு மாகாணத்தில் அதிகளவில் பாதிப்புகள் உள்ளதாகவும், மேலும் கண்டி, காலே, யாழ்பாணம், புத்தளம் போன்ற மாடங்களில் பெரும் பாதிப்புகள் நிலவுவதாகவும் ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

இந்த ஆண்டில் மட்டும் சுமார் 60 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு டெங்கு பாதிப்பு உறுதியாகியுள்ளதாகவும்,  இவர்களுக்கான சிகிச்சைக்கு 36 சுகாதார மண்டலங்கள் பிரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கொரொனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ள நிலையில், டெங்கு பாதிப்பை குறைக்க வேண்டிய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

Edited by Sinoj