Daily Horoscope
✕

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

Written By vinoth
Updated: திங்கள், 11 நவம்பர் 2024 (09:26 IST)
இந்திய அணியின் சமீபத்தைய தோல்விகளால் அதிகமாக விமர்சனங்களை எதிர்கொள்வது புதிய பயிற்சியாளர் கம்பீர்தான். கம்பீர் இந்திய அணிக்கு பொறுப்பேற்றதில் இருந்து இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 0-2 என்ற கணக்கிலும், தற்போது நியுசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கிலும் தோற்று சொதப்பியுள்ளது.

அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட போது இந்திய அணிக்கு புதிய மீட்பராக இருப்பார் என்ற பிம்பம் உருவாக்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த தோல்விகள் அதை உடைத்துள்ளன. மேலும் இப்போது கம்பீரின் அதிகாரத்தைக் குறைக்கவும் பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி வெல்லாத பட்சத்தில் இந்திய அணிக்கு லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டுக்கு ஒரு பயிற்சியாளர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஒரு பயிற்சியாளர் என இரண்டு பேரை நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடருக்கு இந்திய அணி செல்வதற்கு முன்பாக பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக அமைந்துள்ளது. சமீபகால தோல்விகள் பற்றி கம்பீர் என்ன விளக்கம் அளிக்கப் போகிறார்? இந்திய அணியில் அவர் எதிர்காலம் என்ன? என்பது போன்ற கேள்விகள் எல்லாம் எழுந்துள்ளன.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments