சனி, 23 செப்டம்பர் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 25 மே 2023 (07:33 IST)

ஆர் சி பிக்கு வாங்க ஜடேஜா… கூவி அழைக்கும் ரசிகர்கள்!

சிஎஸ்கே மேட்ச்சுகளை காண வரும் மஞ்சள் படையினரின் பெரும் எதிர்பார்ப்பாக இருப்பது தோனியை களத்தில் பார்க்க வேண்டும் என்பதுதான். அதுவும் கடைசி ஓவர்களில் இறங்கும் தோனி வின்னிங் ஷாட்டாக பவுண்டரியோ, சிக்ஸரோ அடித்து விளாசினால் அன்றையா நாளைக்கு அந்த தரிசனம் போதும் என ரசிகர்கள் நினைக்கின்றனர்.

ஆனால் இதனால் அதிகம் பாதிக்கப்படுவது சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜாதான். மிடில் ஆர்டரில் களமிறங்கும் ஜடேஜா ஒவ்வொரு போட்டியிலும் 12 முதல் 15 ஓவர்களுக்கு பிறகே களம் இறங்குகிறார். கிட்டத்தட்ட மேட்ச் முடிய இருக்கும் நிலையில் அவர் களம் இறங்கினாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு தோனி வருகையை நோக்கியே இருக்கிறது. இதனால் “ஜடேஜா நீங்க சீக்கிரம் அவுட் ஆகி போங்க.. தோனியை வர சொல்லுங்க” என ரசிகர்கள் போர்டு பிடிப்பது ஜடேஜாவை மிகவும் வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக அவரே வெளிப்படையாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில் சென்னை அணி கடைசியாக விளையாடிய லீக் போட்டிக்குப் பிறகு தோனியும் ஜடேஜாவும் சற்று ஆவேசமாகப் பேசிக்கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் ஜடேஜா இப்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “கர்மா தாமதமாகவோ அல்லது சீக்கிரமாகவோ கண்டிப்பாக உங்களை தாக்கும்” என சூசகமாக ட்வீட் செய்துள்ளார். இதனால் அணி நிர்வாகத்தோடு அவருக்கு ஏதும் பிரச்சனையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இப்போது ஜடேஜாவை ஆர் சி பி அணிக்கு வந்துவிட சொல்லி, ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் நடந்த போட்டியில் ஜடேஜாவிற்கு மதிப்பு வாய்ந்த வீரர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டது. அதைப் பெற்ற பின்னர் “நான் மதிப்பு வாய்ந்த வீரர் என்பது சில ரசிகர்களுக்கு மட்டும் புரியவில்லை” எனக் கூறி ஆதங்கத்தை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.