Daily Horoscope
✕

இந்த நான்கு அணிகள்தான் உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு செல்லும்… இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கணிப்பு!

Written By vinoth
Updated: திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (08:15 IST)
இந்தியாவில் நடக்க உள்ள உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் அக்டோபர் 15 ஆம் தேதி நடக்க உள்ளது. இப்போட்டியை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

இந்த முறை 10 அணிகள் உலகக்கோப்பை தொடரில் விளையாட உள்ள நிலையில் எந்தந்த அணிகள் அரையிறுதிக்கு செல்லும் அணிகளாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதுபற்றி பல முன்னாள் வீரர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த உலகக்கோப்பை தொடரை வென்ற இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு செல்லும் அணிகள் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். அவரின் கணிப்பின்படி ‘இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான்’ ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு செல்லும் எனக் கூறியுள்ளார்.

மேலும் இங்கிலாந்து அல்லது இந்தியா ஆகிய அணிகள் கோப்பையை வெல்ல அதிகவாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

சானியா மிர்சா சாதனையை முறியடித்த கோவை 17 வயது இளம் பெண்.. டென்னிஸ் உலகில் ஒரு மகுடம்...

4வது டி20 போட்டியில் இந்தியா தோல்வி.. மே.இ.தீவின் கேப்டன் ஷாய் ஹோப் அபாரம்...

மீண்டும் சன்ரைசர்ஸ் அணிக்கு திரும்பிய நடராஜன்.. ஆனால் பாதி விலைக்கு தான்...

கால்பந்து போட்டி போல் கிரிக்கெட்டில் தரம் பிரிக்க வேண்டும்: கவாஸ்கர் யோசனை...

ஜோஸ் பட்லருக்கு தொடையில் அறுவை சிகிச்சை.. 2027 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments