செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 14 ஜூலை 2021 (09:28 IST)

332 ரன்கள் இலக்கை அசால்ட்டாக எட்டிய இங்கிலாந்து: ஒயிட்வாஷ் ஆன பாகிஸ்தான்!

332 ரன்கள் இலக்கை அசால்ட்டாக எட்டிய இங்கிலாந்து: ஒயிட்வாஷ் ஆன பாகிஸ்தான்!
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது
 
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 9 விக்கெட் இழப்பிற்கு 331 ரன்கள் எடுத்தது,. கேப்டன் பாபர் அசாம் அபாரமாக விளையாடி 158 ரன்கள் எடுத்தார். முகமது ரிஸ்வான் 74 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 332 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 48 ஓவரிலேயே 12 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் வின்ஸ் 102 ரன்களும், லீவீஸ் கிரிகேரி 77 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடதக்கது 
 
இதனை அடுத்து ஏற்கனவே 2 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் தொடர் நாயகனாக சாகுயிப் முகமது தேர்வு செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது