ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 13 ஜூலை 2021 (22:57 IST)

உழைப்பிற்கான வெற்றி …பா.ரஞ்சித்தை பாராட்டிய இயக்குநர்!

உழைப்பிற்கான வெற்றி உங்களை வந்தடையும் என பா.ரஞ்சித்தை இயக்குநர் சேரன் பாராட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியர் பா.ரஞ்சித். இவர், தற்போது சர்பாட்டா பரம்பரை என்ற படத்தை நடிகர் ஆர்யாவை வைத்து இயக்கியுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தைப் பார்த்த கமல்ஹாசன் பாராட்டியுள்ள நிலையில் விரையில் இப்படம் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிவடைந்த நிலையில் இப்படத்தின் டப்பிங் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

எனவே சர்பேட்ட நடிகர் காளி வெங்கட் இப்படத்தின் டப்பிங் பணியில் பங்கேற்றது குறித்த அப்டேட் வெளியிட்டார்.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் வரும் ஜூலை 22 ஆம் தேதி ’சர்பாட்டா பரம்பரை’ என்ற படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
 
இயக்குனர் சேரன்

இந்த ஆண்டு வெளியாகும் படங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்காக தன் உடலை மிக வருத்தி அதிக உழைப்பைக் கொடுத்து நடித்திருக்கிறார்.

ஆர்யா. இப்படத்திற்கு விருதுகள் குவியும் எனவும் பலரும் கருத்துகள் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் சேரன் இப்படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித்திற்கு வாழ்த்துகளுடன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் சேரன் பதிவிட்டுள்ளதாவது: நம்பிக்கையூட்டும், திரைப்படம் பார்க்கத்தூண்டும் டிரெயிலர்..  @beemji உங்கள் உழைப்பிற்கான வெற்றி உங்களை வந்தடையும்.. வாழ்த்துக்கள். @arya_offl @KalaiActor @AnupamaKumarONE மற்றும் பணிபுரிந்த அனைவருக்கும்..எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு பா.ரஞ்சித் நன்றி ஐயா எனத் தெரிவித்துள்ளார்.