இந்திய கிரிக்கெட் அணி பந்துவீச்சாளர் ஜாஸ்ப்ரிட் பும்ராவுக்கு அதிக பொறுப்புகள் வழங்குவது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் கவலை தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக விளங்கி வருபவர் ஜாஸ்பிரிட் பும்ரா. நடந்து முடிந்த ஆஸ்திரேலியா - இந்தியா டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியை கேப்டனாக வழிநடத்தி வெற்றி பெற்று கொடுத்ததுடன், ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனையும் படைத்தார்.
இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தாலும் பும்ராவின் பங்களிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. அதேசமயம் மொத்த அணியும் பும்ரா என்ற ஒற்றை ஆளை நம்பி இருப்பதும் பிரச்சினைக்குரியதாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் “பும்ராவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்குவதற்கு முன்பாக ஒருமுறைக்கு இருமுறை பிசிசிஐ யோசிக்க வேண்டும். விக்கெட்டுகள் எடுப்பது மற்றும் நல்ல உடல் வலிமையுடன் இருப்பதில் அவரது முழு கவனமும் இருக்க வேண்டும். தங்க முட்டையிடும் வாத்தை கொன்று விடாதீர்கள்” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K