1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated: வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (09:09 IST)

RCB அணிதான் காரணம்… இந்திய அணியில் தேர்வானது குறித்து தினேஷ் கார்த்திக் ட்வீட்!

தினேஷ் கார்த்திக் டி 20 உலகக்கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக அணியில் தனது இடத்துக்காக போராடிவந்த தினேஷ் கார்த்திக் தனது 37 ஆவது வயதில் தற்போது டி 20 அணியில் பினிஷராகக் கலக்கி இடம்பிடித்து வருகிறார். இதையடுத்து தற்போது அணியில் இடம்பிடித்து வரும் அவர் ஆசியக் கோப்பை தொடரில் இடம்பிடித்தார். ஆனால் அவருக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

இதையடுத்து அவருக்கு மீண்டும் டி 20 உலகக்கோப்பையில் மீண்டும் இடம் வழங்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் அவர் டி 20 உலகக்கோப்பையில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் “ எனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்து RCB பெரியளவில் உதவியாக இருந்தது. குறிப்பாக RCB அணியின் ரசிகர்களுக்கும், அவர்கள் அளித்த ஆதரவுக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.