திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (17:45 IST)

போடு மாமா.. அப்படியே போடு மாமா...: மைதானத்தில் அஸ்வின் - தினேஷ் கார்த்திக்!

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், அஸ்வினை ஊக்கப்படுத்தும் விதத்தில் மைதானத்தில் தமிழில் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. 
 
அந்த வீடியோவில் அஸ்வின் பந்துவீசும் போது, கீப்பிங்கில் இருக்கும்  தினேஷ் கார்த்திக் அந்த டேய்..டேய்..டேய்.. வேற மாதிரி டா நீ...போடுறா மாமா.. நல்லாருக்கு அஷ்வின்.. போடு மாமா.. போடு மாமா.. அடுத்த மூணு பாலையும்.. அப்படியே போடு.. என்ன பண்ணுறான்னு பாக்கலாம் அஷ்வின்.. 
 
ரொம்ப கிட்ட வேண்டாம், இவனுக்கெல்லாம் சாதரணமா பால் போடு, ஒரு ரன் போன பரவாயில்ல...கால்ல பட்டா காலி.. பொறுமையா பால் போடு அஷ்... என்று கூறுகிறார்.
 
இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது, தினேஷ் கார்த்திக் இவ்வாறு தமிழில் பேசுவது அஸ்வினுக்கு ஊக்கமாகவும், இங்கிலாந்து வீரர்களை திசை திருப்பும் முயற்சியாவும் இருக்கிறது.