‘தினேஷ் கார்த்திக் நல்ல வர்ணனையாளர்… ஆனால் அணியில் ‘ அஜய் ஜடேஜா சர்ச்சை கருத்து
இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கை நான் தேர்வு செய்யமாட்டேன் என முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக அணியில் தனது இடத்துக்காக போராடிவந்த தினேஷ் கார்த்திக் தனது 37 ஆவது வயதில் தற்போது டி 20 அணியில் பினிஷராகக் கலக்கி இடம்பிடித்து வருகிறார். இதையடுத்து தற்போது அணியில் இடம்பிடித்து வரும் அவர் ஆசியக் கோப்பை தொடரில் இடம்பிடித்துள்ளார்.
ஆறாவது அல்லது ஏழாவது இடத்தில் களமிறங்கிய வரும் தினேஷ் கார்த்திக், ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் அந்த இடத்தில் போட்டியில் உள்ளனர். இந்நிலையில் ஆசியக் கோப்பை தொடரில் “அவரை அணியில் எடுத்தாலும், ஆடும் லெவனில் இருப்பாரா என்பது சந்தேகமே. அவரை ரிஸர்வ் வீரராகவே எடுத்திருக்க வேண்டும்” என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
அதே போல இப்போது முன்னாள் வீரரான அஜய் ஜடேஜாவும் தினேஷ் கார்த்திக்கை அணியில் எடுத்ததை ஆமோதிக்கவில்லை. இதுபற்றி அவர் “தினேஷ் கார்த்திக்கிற்கு இங்கு வேலை இல்லை. அதனால் நான் கார்த்திக்கை அணியில் எடுக்கமாட்டேன், அவர் ஒரு வர்ணனையாளராக மிகவும் திறமையானவர். அதனால் என் பக்கத்தில் அமர்ந்து கமெண்ட்ரி செய்யலாம். ஆனால் அங்கு, அணியில், நான் அவரை தேர்வு செய்ய மாட்டேன், ”என்று ஜடேஜா கூறியுள்ளார்.