செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 12 மே 2023 (13:19 IST)

தோனி இந்திய அணிக்கு பயிற்சியாளராக வரலாம்… ஆனா?- கவாஸ்கர் சொல்லும் ஐடியா நல்லா இருக்கே!

ஐபிஎல் போட்டிகள் வந்தாலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் மட்டுமல்ல மற்ற அணி ரசிகர்களுமே தோனியின் சிக்ஸர்களை காண குவிந்து விடுவர். இந்திய அணி ஜாம்பவான் வீரரான தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருவதால் அப்படி ஒரு மவுசு.

தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் தோனி விரைவில் ஓய்வு பெற உள்ளதாக பேசிக் கொள்ளப்பட்டது. ஒவ்வொரு சீசனிலும் அப்படி சொல்லப்பட்டாலும் கூட இதுவரை தோனி அவராக அவரது ஓய்வு குறித்து பேசவில்லை. ஆனால் இந்த ஐபிஎல்லில் ஆரம்பம் முதலே ஓய்வு பெறப் போவது போல சில இடங்களில் மறைமுகமாக அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தோனி ஓய்வு பெற்றதும் மேலும் சில ஆண்டுகள் ஓய்வு எடுத்துக்கொண்டு இந்திய அணிக்கு பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கலாம் எனக் கூறியுள்ளார். விரைவில் டிராவிட்டின் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில் தோனி, அடுத்த பயிற்சியாளராக பதவியேற்றால் இந்திய அணிக்கு சிறப்பான ஒரு காலமாக அமைய வாய்ப்புள்ளது.