பிரபல நிறுவனத்திற்கு பிராண்ட் அம்பாசிட்டரான தோனி
ஜியோ மார்ட்-க்கு பிராண்ட் அம்பாசிட்டராக தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனி. இவர் மூன்று வகையான போட்டிகளிலும் அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த ஒரே கேப்டன் என்ற சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றிருந்தாலும், அவர் தொடர்ந்து, ஐபிஎல் தொடரில், சென்னை கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
அதேசமயம், விளம்பரங்களில் நடிப்பதும், சினிமா படங்கள் தயாரிப்பது மற்றும் பல பிராண்டுகளின் அம்பாசிடராகவும் இருக்கிறார்.
இந்த நிலையில், நாட்டில் உள்ள பிரபல ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ மார்ட்-க்கு பிராண்ட் அமாசிட்டராக தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.