திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 1 நவம்பர் 2022 (09:59 IST)

35 பந்துகளில் சதமடித்து கலக்கிய இளம் தென் ஆப்பிரிக்க வீரர்!

தென் ஆப்பிரிக்க அணியின் இளம் வீரரான டிவால்ட் பிராவிஸ் 35 பந்துகளில் சதமடித்து அசத்தியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த 19 வயதாகும் டிவால்ட் பிராவிஸ் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை தொடரின் மூலம் கவனம் ஈர்த்தார். அதன் பின்னர் அவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக எடுக்கப்பட்டார்.

இந்நிலையில் இப்போது தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் உள்ளூர் போட்டியில் அவர் 35 பந்துகளில் சதமடித்து அசத்தியுள்ளார். மேலும் அவர் 57 பந்துகளில் 162 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்துள்ளார்.