Daily Horoscope
✕

சி எஸ் கே அணிக்கு பெரும் பின்னடைவு.. காயத்தால் அவதிப்படும் வெளிநாட்டு வீரர்!

Written By vinoth
Updated: திங்கள், 4 மார்ச் 2024 (08:19 IST)
இதுவரை ஐபிஎல் தொடரை ஐந்து முறை கைப்பற்றி அதிக கோப்பை வென்ற அணிகளில் ஒன்றாக உள்ளது சிஎஸ்கே. இந்நிலையில் இன்னும் 20 நாட்களில் ஐபிஎல் அடுத்த சீசன் தொடங்கவுள்ள நிலையில் சிஎஸ்கே அணி அதற்காக தயாராகி வருகிறது. தோனி ஏற்கனவே பயிற்சியை தொடங்கிவிட்டார்.

தற்போது ருத்துராஜ் உள்ளிட்ட வீரர்கள் சென்னையில் வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டுடன் தோனி ஓய்வுபெறுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவருக்கு வெற்றிக் கோப்பையை பரிசாக அளிக்க வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர்.

இந்நிலையில் சென்னை அணியின் பேட்டிங் தூண்களில் ஒருவராக கருதப்படும் நியுசிலாந்து அணியின் டெவன் கான்வே காயம் காரணமாக இப்போது கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒதுங்கியுள்ளார். இதனால் அவர் ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அவர் விலகும் பட்சத்தில் அது சி எஸ் கே அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும்.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments