திங்கள், 12 ஜனவரி 2026
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 22 ஏப்ரல் 2025 (08:01 IST)

சிஎஸ்கே அணி வீரரின் தந்தை காலமானார்… ரசிகர்கள் அஞ்சலி!

சிஎஸ்கே அணி வீரரின் தந்தை காலமானார்… ரசிகர்கள் அஞ்சலி!
சி எஸ் கே அணிக்காகக் கடந்த சில ஆண்டுகளாக விளையாடி வருபவர் நியுசிலாந்தைச் சேர்ந்த டெவேன் கான்வே. சி எஸ் கே அணி 2023 ஆம் ஆண்டு கோப்பையை வென்ற போது அதில் முக்கியப் பங்காற்றியவர் கான்வே.

அதைத் தொடர்ந்து அவரை ஏலத்தில் மீண்டும் தக்கவைத்தது சி எஸ் கே அணி. இந்த ஆண்டு அவர் சி எஸ் கே அணிக்காக விளையாடிய நிலையில், திடீரென தாய்நாட்டுக்குத் தனிப்பட்டக் காரணங்களுக்காகக் கிளம்பினார்.

இந்நிலையில் இப்போது டெவேன் கான்வேவின் தந்தை டெண்டன் கான்வே இயற்கை எய்தியுள்ளதாக சி எஸ் கே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த கடினமான நேரத்தில் கான்வே மற்றும் அவரது குடும்பத்தினரோடு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து சி எஸ் கே அணி ரசிகர்கள் டெண்டன் கான்வேவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் காரணமாகவே கடந்த போட்டியில் சி எஸ் கே அணியின் கருப்புப் பட்டை அணிந்து ஆடியுள்ளனர்.