பவர்ப்ளேவில் சிறப்பாக வீச தோனிதான் காரணம்… தீபக் சஹார் கருத்து!
சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் பவர் ப்ளேயில் தான் சிறப்பாக பந்துவீச தோனிதான் காரணம் எனக் கூறியுள்ளார்.
சென்னை அணிக்காக கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடிவரும் தீபக் சஹார் பவர் ப்ளேக்களில் சிறப்பாக பந்துவீசும் பவுலர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். ஆனால் அதற்கு முக்கியமானக் காரணம் சென்னை அணியின் கேப்டன் தோனிதான் எனக் கூறியுள்ளார். மேலும் சென்னை அணியில் என்னைத் தவிர பவர் ப்ளேயில் யாருமே 3 ஓவர்கள் வீசியதில்லை. ஆட்டத்தின் முதல் ஓவரை வீசுவது அவ்வளவு எளிதில்லை. அவரது தலைமையின் கீழ் விளையாடி நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். என்னுடைய பந்துவீச்சு திறன் அடுத்த நிலைக்கு செல்ல அவர் முக்கியக் காரணமாக இருந்தார் எனக் கூறியுள்ளார்.