Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் அணிக்கு எதிராக மட்டும் 1000 ரன்கள்! – வார்னரின் சிறப்பான சாதனை!

Written By Prasanth Karthick
Updated: வியாழன், 21 ஏப்ரல் 2022 (10:50 IST)
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக அரைசதம் வீழ்த்திய டேவிட் வார்னர் புதிய சாதனையை படைத்துள்ளார்.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 115 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் இரண்டாவதாக களமிறங்கிய டெல்லி அணி 10 ஓவர்களிலேயே 119 ரன்களை குவித்து வெற்றியை தட்டி சென்றது.

இந்த போட்டியில் டேவிட் வார்னர் 56வது அரைசதம் வீழ்த்தினார். முன்னதாக சன் ரைசர்ஸ் அணியில் இருந்தபோதும், தற்போது டெல்லி அணியில் இருக்கும்போதும் மொத்தமாக தனிநபராக பஞ்சாப் அணிக்கு எதிராக இதுவரை டேவிட் வார்னர் 1005 ரன்களை குவித்துள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிராக 936 ரன்களை குவித்துள்ளார். இந்த போட்டியில் அவர் விளாசிய அரைசதம் தொடர்ந்து மூன்றாவது அரைசதம் ஆகும்.

எல்லாம் காட்டு

இன்று முதல் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்.. முதல் போட்டி யார் யாருக்கு?

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. திடீரென விலகிய பும்ரா.. என்ன காரணம்?

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள்.. இந்திய அணி அறிவிப்பு.. மீண்டும் வருகிறார் ஜடேஜா...

வைபவ் சூர்யவன்ஷி வரலாற்று சாதனை.. 16 வயதிற்குள் இதுவரை யாருமே செய்யாத சாதனை...!

இந்தியா - பிரேசில அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி.. விழாக்கோலம் ஆகும் கொல்கத்தா...

அடுத்த கட்டுரையில்
Show comments