புதன், 27 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 31 மார்ச் 2018 (15:54 IST)

இனி ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட மாட்டேன்: டேவிட் வார்னர் உருக்கம்

ஆஸ்திரேலிய அணிக்காக ஓராண்டு தடை முடிந்த பிறகும் விளையாட மாட்டேன் என டேவிட் வார்னர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
 
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய  அணியின் தொடக்க வீரர் பேன்கிராப்ட் பீல்டிங் செய்த போது ஸ்மித்தின் உதவியுடன் பந்தை பொருள் ஒன்றால் சேதப்படுத்தி உள்ளார். ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் சுமித்தும் இந்த விவகாரத்தை ஒப்புக் கொண்டார். 
 
இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்  ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு விளையாட தடை, கேப்டன் பதவி ஏற்க இரண்டு ஆண்டுகள் தடை விதித்துள்ளது. மேலும், பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் விளையாட தடை விதித்தது.
 
இதனையடுத்து ஸ்டீவன் ஸ்மித் கண்ணீர் மல்க தான் செய்த தவறுக்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். அதைத்தொடர்ந்து டேவிட் வார்னர் ரசிகர்களிடம் கண்ணீர் மல்க கூறியிருப்பதாவது;- 
 
”ஆஸ்திரேலியாவை மோசமான நிலைமையில் கீழே விழ வைத்துவிட்டேன். எனது தவறான செயலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மன்னிக்க முடியாத தவறை செய்துவிட்டேன். இனி ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட மாட்டேன். நான் நேசித்த ஆஸ்திரேலியா அணிக்காக நான் விளையாட  போவதில்லை என்பதை நினைத்தால் இதயம் வலிக்கிறது. நாட்டு மக்களிடமும் எனது குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.