வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 30 மார்ச் 2018 (18:28 IST)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா பேட்டிங்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்து வருகிறது.
 
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயனம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் கொண்ட போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது.
 
இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்கில் இன்று தொடங்கியது. ஆஸ்திரேலிய அனியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் வார்னர்,ஸ்மித், பான்கிராப்ட் நீக்கப்பட்டு ரென்ஷா,பேர்ன்ஸ், ஹேண்ட்ஸ்காம்ப் ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதல் நாள் தேனீர் இடைவேளை வரை 2 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்துள்ளது. அதிகப்பட்சமாக மர்கரம் சதம் கடந்து ஆட்டமிழக்காமல் கழத்தில் உள்ளார்.